செய்திகள் :

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், அணியின் முன்னேற்றம் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

RR Vs RCB
RR Vs RCB

"நிச்சயமாக, கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த மைதானத்தில், இன்று நாங்கள் மிகவும் நேர்த்தியாக விளையாடினோம்.

பந்துவீச்சை நாங்கள் தொடங்கிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது, ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் நாங்கள் ஆட்டத்திற்குள் மீண்டும் வந்த விதம் சிறப்பாக இருந்தாலும், இன்னும் 20 ரன்கள் குறைவாகவே விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு கேப்டனாக நான் எடுத்த சில தவறான முடிவுகளால் அவர்களை 170 ரன்களுக்குள் சுருக்க முடியாமல் போய்விட்டது. இந்த ஆடுகளத்தில் நேராக சிக்ஸர்களை அடிப்பது கடினம், ஆனால் எங்களது சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு சாதகமாக இடம் கொடுத்துவிட்டனர்.

ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தியில் மேற்கொண்ட பயிற்சிகள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. இங்குள்ள கறுப்பு மண் பந்தைத் தாழ்வாகவும் மெதுவாகவும் வரச்செய்யும் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆடுகளத்தின் தன்மையைக் கணிப்பதில் நாங்கள் சிறந்த அணியாக இருக்க விரும்புகிறோம். மேலும், வைபவ் சூர்யவன்ஷி ஒரு குழந்தை போன்றவர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

அவருக்குப் பிடித்த உணவுகளை வழங்கி, அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் வேலை" என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

``இந்த மைதானத்தின் மெதுவான ஆடுகளத்திலேயே சிறப்பாக ஆடிய நாங்கள், இனி வரும் அதிரடி ஆடுகளங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்," என்று பேசினார்.

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

IPL: கிரிக்கெட் உலகை மிரளவைத்த அந்த `27' பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் 'ஒன் மேன் ஆர்மி' - யார் இவர்?

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதா... மேலும் பார்க்க

KKR vs LSG: `எனது குடும்பம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது, அதனால்.!' - முகுல் சௌத்ரி எமோஷனல்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) ஆட்டத்தில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய முகுல் சௌத்ரி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார... மேலும் பார்க்க