செய்திகள் :

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

RR vs RCB
RR vs RCB

இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

​இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார், "ராஜஸ்தான் பேட்டர்கள், குறிப்பாக வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

​கடந்த போட்டிகளில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

சுயாஷை பந்துவீச கொண்டு வர முடியாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர், ஷெப்பர்ட் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்த மூன்று பந்துவீச்சாளர்களைக் கொண்டே அந்த ஓவர்களை நாங்கள் சமாளித்திருக்க வேண்டும்.​ஐபிஎல் போன்ற ஒரு போட்டி நிறைந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும்.

ஆனால் அந்தத் தவறுகளில் இருந்து நாம் எப்படிக் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரி... மேலும் பார்க்க

`உலகக்கோப்பை நாயகன் சூர்யா...' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்துக்குப் போராட்டம்?

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்து, ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்திருக்கலாம்.ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரது சமீபத்திய ஆட்டங்கள் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.குறிப்பாக,... மேலும் பார்க்க

CSK vs KKR: "அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்" - தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.போட... மேலும் பார்க்க

CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" - வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ம... மேலும் பார்க்க

`முடிவெடுக்கும் பிசிசிஐ' - சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு ... மேலும் பார்க்க

SRH Vs RR: `அதிரடி சரவெடி...' 4 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் ஈர்த்த இளம் வீரர் சகிப் ஹுசைனின் கதை!

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது... மேலும் பார்க்க