செய்திகள் :

Sardar 2: ``துரந்தர் வேற சர்தார் வேற... இரண்டையும் ஒன்னு சேர்க்காதீங்க" - இயக்குநர் மித்ரன் பளீச்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சர்தார் 2 இயக்குநர் மித்ரன்
சர்தார் 2 இயக்குநர் மித்ரன்

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த சர்தார் திரைப்பட இயக்குநர் மித்ரன், ``என்னுடைய திரைப்பயணத்தில் இதுவே முதல் பெரிய அளவிலான இசை வெளியீட்டு விழா என்று நினைக்கிறேன். வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைப்படம் திரைக்கு வருகிறது.

ட்ரைலரைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். இந்தப் படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. முக்கியமாக, முதன்முறையாக எஸ்.ஜே. சூர்யா சாரும் கார்த்தி சாரும் இணைந்து நடிக்கிறார்கள். அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். மேலும், படத்தில் 'வேல்' குறித்த கேள்விகள் எழுகின்றன. இப்போது முருகர் ரெபரென்ஸ் படங்கள் அதிகம் வருகின்றன.

ஆனால், சர்தார் முதல் பாகத்திலேயே கார்த்தியின் கதாபாத்திரம் முருகப் பக்தராகவும், முருகர் வேஷம் அணிந்து பாட்டுப் பாடுபவராகவும்தான் காட்டப்பட்டிருக்கும். அதுவே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது.

துரந்தருக்கு முன்பே கமல் சாரின் 'விஸ்வரூபம்' போன்ற திரைப்பட வரிசையில் ஸ்பை திரில்லராக வந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் சர்தார் 2 உருவாக்கப்பட்டுள்ளது. துரந்தர் வேறு சர்தார் வேறு துரந்தருடன் சர்தாரை சேர்த்து நசுக்கிவிடாதீர்கள்." என நகைச்சுவையாகப் பேசினார்.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க