செய்திகள் :

Shalini Pandey: ``அது நான் இல்ல... இது வேதனையளிக்கிறது" - AI Deepfake குறித்து நடிகை ஷாலினி பாண்டே

post image

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதமானது. அதைத் தொடர்ந்து, முன்னணி திரைப் பிரபலங்களான ஆலியா பட், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், பாலிவுட் நடிகர்கள் ஆமிர் கான், ரன்வீர் சிங் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இந்த டீப்ஃபேக் போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் தற்போது `அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஷாலினி பாண்டே சிரமத்தை எதிர்க்கொண்டிருக்கிறார்.

ஷாலினி பாண்டே
ஷாலினி பாண்டே

இது தொடர்பாக அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``என் உருவத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பரப்பப்படும் வீடியோ முற்றிலும் போலி. அது ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதில் இருப்பது நான் அல்ல. இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பாக பெண்களைக் குறிவைத்து சீரழிப்பது மிகவும் வேதனையளிக்கிறது" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை மிருணாள் தாக்கூர் தனது டீப்ஃபேக் வீடியோ குறித்து காட்டமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். "அனுமதியின்றி ஒருவரின் அடையாளத்தைத் திருடுவது சட்டப்படி குற்றம். உடனடியாக இதை நிறுத்த வேண்டும், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க