செய்திகள் :

SIR முடிந்த மாநிலங்களில் விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

post image

மத்திய தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. தற்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் நீக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்கள் மற்றும் 18 வயதை கடந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் கமிஷன் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

தலைமை தேர்தல் கமிஷனர்கள் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் முடிந்த மாநிலங்களில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளை தொடங்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பீகார் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் SIR ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. SIR இன் போது அல்லது அதற்குப் பிறகு யாருடைய பெயர் விடுபட்டிருந்தாலும், இளம்/முதல்முறை வாக்காளர் உட்பட யாரேனும் ஒருவர், புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு SIR இன் போது அல்லது அதற்குப் பிறகு வெளியேறிய தகுதியுள்ள வாக்காளர்களை, படிவம் 6ஐப் பயன்படுத்தி தொடர்ச்சியான புதுப்பித்தல் செயல்முறையின் மூலம் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று அத்தகைய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிந்து படிவம் 6 மூலம் சேர்க்கையை எளிதாக்குவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இப்பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீவ்ஸ் & வொண்டர்ஸ்’26 : RmKV-யின் புதிய கலெக்சன் அறிமுகம்!

நூற்றாண்டுக்கும் மேலாக, தனித்துவமான பட்டுப் புடவைகளுக்காகவும், கைத்தறித் துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பிற்காகவும் ஆரெம்கேவி சில்க்ஸ் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹம்ச தம... மேலும் பார்க்க

"நிலத்தில் 99% பங்கு இருக்கும் அஜித் பவார் மகனுக்கு நில மோசடியில் தொடர்பு இல்லையா?" - கோர்ட் காட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மலிவு விலைக்கு வாங்கியது தொடர்பாக மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான அமேடியா எண்டர்... மேலும் பார்க்க

"தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார... மேலும் பார்க்க

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்' - யார் இந்த சதீஷ் குமார்?

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த த... மேலும் பார்க்க

குரோர்பதி படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கீழே விழுந்து காயம் - `ஓய்வு' குறித்து நச் கமென்ட்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த அமிதாப்பச்சன் அதிலிருந்து மீண்ட... மேலும் பார்க்க

"அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன்; ஆனால்..."- 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்ற ஒற்றை ஆசையினால், கடின உழைப்பால் ஈட்டிய வருமானம், பூர்வீக நிலம் மற்றும் நகைகள் என சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை லாட்டரி சீட்டுகளுக்காகவே... மேலும் பார்க்க