செய்திகள் :

Sivakarthikeyan: "வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டதா?" - விளக்கும் தயாரிப்பாளர்

post image

நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் 'சேயோன்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள தகவலை வெங்கட் பிரபுவே முன்னர் ஒரு மேடையில் அறிவித்திருந்தார்.

SK 26 - Seyon
SK 26 - Seyon

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றி, கடந்த சில நாட்களாக இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் பேசப்பட்டன.

இது குறித்து நம் சினிமா விகடன் சேனலுக்குப் பேட்டியளித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், இணையத்தில் பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி எனத் தெரிவித்துள்ளார்.

"சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன்.

அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம்.

சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Sathya Jyothi Films - Thyagarajan
Sathya Jyothi Films - Thyagarajan

நாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஆனால், ஏ.ஆர். ரகுமானுடன் இதுவரை பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" எனக் கூறினார்.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்க... மேலும் பார்க்க