Nelson: "விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார்" - Parking தயாரிப்பாள...
Snooker விளையாட்டில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த தமிழ்நாட்டு பெண் - யார் இந்த அனுபமா ராமச்சந்திரன்?
ஸ்னூக்கர் விளையாட்டில் IBSF (15-சிவப்பு) உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சில நாள்களாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன். இந்தப் பட்டத்தை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளார் இவர்.
இவர் ஹாங்காங்கை சேர்ந்த இங் ஆன் யீயை 3-2 வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

யார் இவர்?
23 வயதாகும் அனுபமா ராமச்சந்திரன் சென்னையை சேர்ந்தவர் ஆவார்.
தனது 13 வயதில் சம்மர் கேம்ப்பின் போது ஸ்னூக்கர் விளையாட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் இவர். இந்த விளையாட்டில் ஆர்வம் அதிகமாக, 15 வயதில் இருந்து போட்டியில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார்.
ஜூனியர் லெவலில் 8 தேசிய ஜூனியர் பட்டங்களை வென்றிருக்கிறார்.
2017-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலக ஓபன் 16 வயது உட்பட்ட ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
2023-ம் ஆண்டு, அமீ கமானியுடன் பெண்கள் ஸ்னூக்கர் உலக கோப்பையை வென்றிருக்கிறார். அதே ஆண்டு, 21 வயது உட்பட்ட பிரிவில் உலக பெண்கள் ஸ்னூக்கர் பட்டத்தை வென்றிருக்கிறார்.
2024-ம் ஆண்டு, அமெரிக்க மகளிர் ஓபன் போட்டியில் ரன்னர் அப்பாக வந்திருக்கிறார்.
இப்போது இவர் ஸ்னூக்கர் விளையாட்டில் IBSF (15-சிவப்பு) உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
இன்னும் பல சாதனைகளை குவிக்க வாழ்த்துகள் அனுபமா!




















