செய்திகள் :

SRH v KKR: ``இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை.!" - தோல்வி குறித்து கேப்டன் ரஹானே

post image

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹோம் கிரவுண்டில் வெற்றியை நழுவவிட்டது.

இந்த தோல்விக்குப்பிறகு பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, ``நிச்சயமாக இது ஒரு கடினமான நாள்தான். பேட்டிங்கின்போது சில முக்கியமான பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருக்க வேண்டும். களத்தில் செட் ஆன பேட்டர்கள் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் அது இன்று நடக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை, முதல் 10 ஓவர்களில் எதிரணி 130 முதல் 140 ரன்கள் வரை எடுப்பார்கள் என்றுதான் கணித்திருந்தோம். ஆனால், மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் ஆட்டத்திற்குள் எங்களைக் கொண்டு வந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்து சற்று மெதுவாக வந்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு இன்னும் சாதகமாகும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. இருந்தாலும், இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை. பவர்பிளேயில் 78 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைப் பெற்றும், முக்கியமான ஒரு விக்கெட்டை கிரீன் ரன் அவுட் மூலம் இழந்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.

கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே

ஹோம் கிரவுண்டில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இப்போது நாங்கள் மீண்டும் அறைக்குச் சென்று, அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம். பேட்டிங்கில் இன்னும் ஒரு வீரரை கூடுதலாகச் சேர்ப்பது பற்றியும் ஆலோசிப்போம். இன்னும் 3-4 நாட்கள் இடைவெளி இருப்பதால், ஒரு மோசமான நாளை மறந்துவிட்டு நேர்மறையான மனநிலையுடன் அடுத்தப் போட்டியில் மீண்டு வருவோம்" என்று பேசினார்.

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க