திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி....
Throat infection: குளிர்கால தொண்டை தொற்று; வீட்டு மருத்துவம் சொல்லும் சித்த மருத்துவர்!
குளிர்காலம் தொடங்கியதிலிருந்தே ’தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு. எச்சில் விழுங்கும்போதெல்லாம் வலிக்குது' போன்ற புலம்பல்களை அதிகமாகக் கேட்க முடிகிறது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இதுபோன்ற தொண்டை சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட, சில எளிமையான வீட்டு மருத்துவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
வாய் கொப்பளிப்பு

''தொண்டையில் பிரச்னை தெரியவருபவர்கள், முதல் நாளிலிருந்தே கீழ்க்காணும் மருத்துவ முறைகளைப் பின்பற்றவும்.
* தினமும் உப்புத்தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரவும்.
அதிமதுர நீர்

* அதிமதுரம் பொடியை நீரில் கலந்து குடிக்கவும். அதிமதுர நீரைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்தும் வரலாம்.
* திரிகடுக சூரணத்தை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.
மஞ்சள் பால்

* பாலில் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, இரவு நேரத்தில் குடிக்கவும்
துளசி

* வெந்நீரில் துளசி சேர்த்து அருந்தவும்.
கற்பூரவல்லி மற்றும் தூதுவளை சட்னி

* கற்பூரவல்லி மற்றும் தூதுவளையை சட்னி போல அரைத்து, இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிடவும்.
முடிந்தவரை வெந்நீர் மட்டும் அருந்தவும்!
* குடிநீர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். சுத்திகரிக்கப்படாத நீரை முழுமையாகத் தவிர்க்கவும். முடிந்தவரை வெந்நீர் மட்டும் அருந்தவும். வெளி இடங்களில், குறிப்பாகத் தெருவோரங்களில் நீராகாரங்கள் குடிக்கும் பழக்கம் இருந்தால், கைவிடவும்!

















