செய்திகள் :

TikTok வீடியோவுக்காக கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கம்; கொல்லப்பட்ட இளைஞர்; இன்ஃப்ளூயன்ஸர் கைது

post image

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவிட்டு பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது.

பாகிஸ்தானின் லாகூரில் TikTok வீடியோ எடுக்கப்பட்டபோது, சிங்கம் தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரின் கஹ்னா (Kahna) பகுதியில் உள்ள தனியார் வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தல்ஹா (Talha) என்ற 19 வயது இளைஞர் அங்கு பணியாற்றி வந்துள்ளார். அப்போது வீடியோ எடுப்பதற்காக அங்கு வந்த சமூக வலைதளப் பிரபலமான நௌமான் ஹசன் (Nauman Hassan), கூண்டிலிருந்த பெண் சிங்கத்தை வெளியே கொண்டுவரச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

வீடியோ படப்பிடிப்பின்போது அந்த பெண் சிங்கமானது கட்டுப்பாட்டை இழந்து தல்ஹாவைத் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பண்ணையின் உரிமையாளர் ஃபய்யாஸ் மற்றும் TikTok பிரபலமான நௌமான் ஹசன் ஆகிய இருவரையும் லாகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களை முதலில் நாய் கடித்ததாகக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சிங்கம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பண்ணைக்கு உரிய அனுமதி இருந்ததா, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இனிப்பைப் பகிர்ந்து... அன்பைப் பரிமாறி! - குழந்தைகள் தினத்தில் நெகிழ்ந்த மழலைகள்!

குழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தைகுழந்தைகள் தினத்தை மேலும் பார்க்க

ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை சாப்பிட்ட நபர்: கடித்தபோது வாயில் வெடித்துச் சிதறி உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் ரசகுல்லா என்று நினைத்து ஒருவர் வெடிகுண்டை சாப்பிட்டுள்ளார். அங்குள்ள திண்டோரி மாவட்டத்தில் இருக்கும் கோட்வாலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பதரியா சாந்தா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்... மேலும் பார்க்க

வீட்டின் மீது தாக்குதல்: `செத்த பிறகுதான் வருவீர்களா?'- போலீஸிடம் கடுகடுத்த மகாராஷ்டிரா அமைச்சர்!

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் சஞ்சய் ஷிர்சாத்திற்கு சாம்பாஜி நகரில் வீடு இருக்கிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தின் மீது நேற்று நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் கற்களை வீசியும், கண்ணாடி ... மேலும் பார்க்க

மும்பை ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை? ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கையை இழந்த சோகம்

மும்பையில் எப்போதும் புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பெண்களுக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள... மேலும் பார்க்க

`பருப்புசாதம் இல்லாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது' - உணவுபழக்கம் குறித்து சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது உணவு பழக்கம் குறித்த தகவல்களை அவரது மகள் பிரியங்கா காந்தியோடு சேர்ந்து பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியிலிரு... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா! மேலும் பார்க்க