செய்திகள் :

TN 2026: "அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்" - நட்டி நடராஜ் பேட்டி

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த 'டி.என். 2026 தங்க நட்சத்திரம்' என்ற படம் அரசியல் நையாண்டி படமாகக் கவனம் ஈர்த்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான அதன் டீஸரில் விஜய்யின் கெட்டப்பில் நட்டி தோன்ற, நடிகர்கள் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர் எனப் பலரும் அரசியல்வாதிகளாக அதிரடி வசனங்கள் தெறிக்கின்றன.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கியிருக்கும் இப்படம் இன்னும் சில நாள்களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஹீரோவான நட்டியிடம் பேசினோம்.

டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்
டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்

``ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்க விரும்புறேன். இந்தப் படத்துல எந்தக் கட்சியையும் தாக்கல. எந்தத் தலைவரையும் குறைசொல்லலை. இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படம். படத்துல நான் வித்தியாசமான 5 கெட்டப்கள்ல வர்றேன். அதில் டீஸரில் வெளியான கெட்டப்பும் ஒண்ணு.

டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்
டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்

முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை ஜனங்களை வாய் விட்டு சிரிக்க வைக்கற படமாக இருக்கும். என்னோட கேரக்டர் பெயர் குல்கந்த் குமார். வட நாட்டில் இருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்த ஒருவன் திடீரென ஸ்டார் ஆக, அதன் பிறகு தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்பதுதான் படத்தின் கதைக்கரு.

இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா சார் சொல்றதுக்கு முன்னாடி, 'அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டது'னு சொன்னதோடு நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்கள் பத்தியும் சொன்னதோடு 'நமது பாடத்திட்டங்களிலேயே அரசியல் ஒரு பாடமாகக் கொண்டு வந்திருக்கணும்' என்ற இன்ட்ரோவோடு இந்தக் கதையைச் சொன்னார்.

குலுங்கி குலுங்கி சிரிச்சுக்கிட்டே கதையைக் கேட்டேன். அதன் பிறகு உடனடியாக ஷூட்டிங் கிளம்பிட்டோம். சென்னை, கோவை, திருப்பூர்னு விதவிதமான இடங்கள்ல ஷூட் செய்திருக்கோம்.

டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்
டி.என். 2026 தங்க நட்சத்திரம் படத்தில்

இதுக்கு முன் ஒரு ஏழெட்டு படங்கள் இயக்கின அனுபவம் கொண்டவர் மாதிரி உமாபதியின் டைரக்ஷன் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகப் பார்க்கக்கூடியவர். எல்லா விஷயத்துக்குமே ரெஃபரன்ஸ் வச்சு, பார்த்து 'இது இப்படி வந்தால் நல்லா இருக்கும்'னு உதாரணத்தோடு விளக்கி வேலை வாங்கினதால, எனக்குமே அவர் இயக்கத்துல நடிச்சது எளிதா இருந்தது.

மறுபடியும் வலியுறுத்தி சொல்ற விஷயம், இந்தப் படத்தில் ஒரு தனி மனித தாக்குதலும் இல்லை. ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பத்தின படமோ கிடையாது. இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படம்'' எனச் சொல்லும் நட்டி, அடுத்து 'கருப்பு', 'இதயம்முரளி', 'திடுக்' ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க