செய்திகள் :

TN Budget: ``நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை" - திருமாவளவன் புகழாரம்!

post image

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்
பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்

மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்; பத்தாயிரம் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் என்ற திட்டம்; மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு; காமராசர் பெயரில் சிறப்புப் பள்ளிகள்; அரசுப் பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பள்ளி நிறைவுத் திட்டம், அதற்காக 300 கோடி ரூபாய் இந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு; பாடத்திட்டங்களை சீரமைப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகள் கொண்ட 200 மாணவர் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு; மதுரையில் சட்டக் கல்லூரி; இவையாவும் பாராட்டத்தக்க அறிவிப்புகள் ஆகும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் அயல்நாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பழங்குடியினர் குடியிருப்புகளின் மேம்பாட்டுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை உயர்த்தி வீடு ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாயாக இந்த அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. இதற்கென 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் வீடுகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான தொகை உயர்த்தப்பட்டாலும் வீடுகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மாநிலத்தின் வருவாய் பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசிடமிருந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக வரவேண்டிய 7586 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள 3461 கோடி ரூபாயும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு முறைப்படி வழங்கினால் தான் நமக்கு கிடைக்கும். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட இந்த திருத்திய வரவு செலவு திட்டத்தில் கூடுதலாக 5452 கோடி ரூபாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதை நாம் எந்த அளவுக்குப் போராடுகிறோமோ அந்த அளவுக்குத்தான் வாங்க முடியும். அதுவே கடந்தகால படிப்பினை.

திருமாவளவன்
திருமாவளவன்

2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதியுதவியின் மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துவந்த வருவாய் குறைந்தது; ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதே அதற்கு முக்கிய காரணம். மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதன் பங்கு 8.3%-இலிருந்து 5.8%-ஆக சரிந்தது. இதேவேளை, மாநிலக் கடன் ₹1.92 லட்சம் கோடியில் இருந்து ₹8.57 லட்சம் கோடியாக உயர்ந்து, கடனுக்கும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் நாட்டிலேயே அதிகமான நிலையை எட்டியது.

வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டிச் செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் நலத்திட்டங்களைத் தொடர்ந்துகொண்டு தான் தேர்தல் வாக்குறுதியாகத் தந்த புதிய நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் தவெக அரசு உள்ளது. மாநிலத்தின் நிதிநிலையைச் சீர்செய்வதற்கு சொந்த வருவாயை வேகமாக அதிகரிப்பதே தவெக அரசின் முன்னால் உள்ள முக்கிய சவாலாக உள்ளது. அதற்கான நம்பிக்கை வெளிச்சத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்."

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க