செய்திகள் :

TN Election Results: ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்? - நாளை காலை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! | Live Updates

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. 'திராவிட மாடல் 2.0' என்ற முழக்கத்துடன் தெம்பாக இருக்கும் திமுக கூட்டணி, 'இந்த முறை நிச்சயம் எங்கள் ஆட்சிதான்' எனக் களமாடும் அதிமுக கூட்டணி ஒருபுறம், 'மாற்று அரசியல்' என்ற கோட்பாட்டுடன் தேர்தல் அரசியலில் தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி, `எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என அன்ப்ரெடிக்டபிளாக இருக்கும் புது வரவு த.வெ.க மறுபுறம் என, நான்குமுனைப் போட்டியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய சாதனையும் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸ்!

அனைத்து வாக்குச்சாவடிகளும் 'நேரலை இணையக் கண்காணிப்பு' (Live Webcasting) மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் மிக அமைதியாகவும், அதேசமயம் மிக அதிக எண்ணிக்கையிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸான வாக்கு எண்ணிக்கையானது நாளை (மே 4-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

மாநில தேர்தல் ஆணையம்

மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 62 மையங்களில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தின் தபால் வாக்குகளும், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றொரு பகுதியிலும் எண்ணப்படவிருக்கின்றன. 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாக்குப்பதிவின் போது சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு நிலவியது. எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடர் நிலவரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பெறலாம். இணைந்து இருங்கள்.!

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க