செய்திகள் :

TNPL 2026: ராணிப்பேட்டையிலிருந்து TNPL வரை; அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசிய ஹரி ராகவேந்திரா!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.

திண்டுக்கல் நத்தம் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்ட மதுரை பாந்தர்ஸ், 241 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தியது. மதுரை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எனத் தடுமாறிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் களத்துக்கு வந்த ஹரி, முதல் போட்டி என்பதையே மறக்கடிக்கும் வகையில் பேட்டை சுழற்றத் தொடங்கினார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்துகொண்டிருக்க, ஹரி மறுபக்கம் மதுரை அணியின் இன்னிங்ஸை தாங்கி நின்றார். 55 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய அவர், 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மிரட்டினார். அவரது அதிரடி ஆட்டத்தால் மதுரை பாந்தர்ஸ் அணி 200 ரன்களைக் கடந்தது.

சதத்தை நெருங்கிய ஹரி, இறுதியில் 98 ரன்களில் ரன் அவுட் ஆனார். வெறும் இரண்டு ரன்களில் சதம் தவறியிருந்தாலும், ராணிப்பேட்டை மாவட்ட அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ஹரி ராகவேந்திரா, இன்று டிஎன்பிஎல் போன்ற களத்தில் அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த... மேலும் பார்க்க

TNPL 2026 : ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும்.!

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,சேப்பாக் சூப்பர் கில... மேலும் பார்க்க

TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! நடந்தது என்ன?

TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க

TNPL: ஒருபக்கம் லாஸ்ட் ஓவர் திக் திக்; மறுபக்கம் `196' மிரட்டல்! - திருச்சி, நெல்லையின் தரமான வெற்றி

“இன்னும் மேட்ச் முடியலப்பா!” — ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்களை இப்படித்தான் சொல்ல வைத்தது.. ஒருபுறம் கடைசி ஓவர் வரை திக்... திக்... என நகர்ந்த நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் ம... மேலும் பார்க்க

TNPL 2026 : சொல்லி அடித்த சேப்பாக் கில்லீஸ் ; முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட மதுரை பாந்தர்ஸ்!

TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்க... மேலும் பார்க்க

TNPL 2026: திருச்சியின் பந்துவீச்சில் சரிந்த நெல்லை... திருப்பூரின் துரத்தலில் தடுமாறிய கோவை!

TNPL 2026 தொடரின் 12-வது மற்றும் 13-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில் நெல்லை ராயல் கிங்ஸை திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்திலும், கோவை கிங்ஸை திருப்... மேலும் பார்க்க