செய்திகள் :

Toxic: 'டாக்ஸிக்' படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறதா!? - பின்னணி என்ன?

post image

யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அளித்த யூடியூபர்கள் மற்றும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்குப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Toxic
Toxic

யூடியூபர்கள் சிலர் தங்களுக்குத் தயாரிப்பு தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்திருப்பதாகத் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், விமர்சனம் செய்பவர்கள் மீது நிஜமாகவே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெங்களூரு நீதிமன்றத்தில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில், படம் குறித்து தவறான மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், படம் தொடர்பாக அவதூறான மற்றும் தவறான தகவல்களை இணையத்தில் பரப்பத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். நீதிமன்றம் அளித்த இந்த தடை உத்தரவு நேர்மையான சினிமா விமர்சனங்களுக்கோ, தனிப்பட்ட கருத்துகளுக்கோ எதிரானது அல்ல.

Toxic
Toxic

படம் பிடிக்கவில்லை என்றோ அல்லது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதையோ நீதிமன்றத்தின் உத்தரவு தடுக்கவில்லை.

ஆனால், திட்டமிட்டு அவதூறு பரப்புவதையும், பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதையும் மட்டுமே இந்த உத்தரவு கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போதை வரை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை.

Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்?

கோவா, போர்த்துக்கீசியர்களின் பிடியிலிருக்கும் சமயத்தில் தன் தம்பி ராயா (யஷ்) தான், அடுத்து கோவாவை ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார் அக்கா கங்கா (நயன்தாரா). பிறகு கோவாவில் சர்க்கஸ் அமைக்க வரும் நா... மேலும் பார்க்க

Toxic: 'Daddy's home' - யஷ் முதல் ருக்மினி வசந்த் வரை; 'டாக்ஸிக்' பட நிகழ்வு | Photo Album

நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம் மேலும் பார்க்க

நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம்

நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்... மேலும் பார்க்க

Toxic: "சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; நாங்கள் ஒன்றும்..." - 'டாக்ஸிக்' பட விழாவில் யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Toxic: "அதில் என் மனைவிக்கு சங்கடம் இருக்க தான் செய்யும்.!" - ரொமேன்ஸ் காட்சிகள் குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' படம், இம்மாதம் 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோர் மு... மேலும் பார்க்க

Yash: "இதையெல்லாம் எங்கிருந்து எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை" - வதந்திகளுக்கு யஷ் விளக்கம்

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டாக்சிக்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Toxic Trailer - Yashநயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா ... மேலும் பார்க்க