செய்திகள் :

TTT: ``படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ, அமெரிக்காவிலோ முடிவு செய்யும் சூழல்!" - ஆர்.கே செல்வமணி!

post image

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ``நடிகர் ஜீவாவை எனக்கு அவர் குழந்தையாக இருந்தபோதே தெரியும். எனது இரண்டாவது படத்தில் அவர் கிருஷ்ணர் வேடம் போட்டு நடித்தார். இன்று அவரது மகனைப் பார்க்கும்போது, அவர் ஜீவாவை விட உயரமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்துபோனேன்.

ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி
ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி

ஜீவாவுக்கு இது ஒரு சிறப்பான 'செகண்ட் இன்னிங்ஸ்'. அவர் பெரிய வெற்றிகளைப் பெறுவார். இந்தப் படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் கண்ணன் அழைத்தபோது மரியாதை நிமித்தமாகவே சென்றேன். ஆனால், படம் தொடங்கியதும், கதை நகர்ந்ததும் தெரியவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக படம் விறுவிறுப்பாகச் சென்றது. இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஒரு சிறிய கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குநர் நிஷாந்த் மாற்றியுள்ளார். அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.

துபாயில் நான் தங்கியிருந்தபோது தயாரிப்பாளர் கண்ணன் காட்டிய விருந்தோம்பல் மறக்க முடியாதது. ஒரு மதிய உணவிற்கு அழைத்தார், அங்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் இருந்தன. தமிழர்களுக்கே உரிய விருந்தோம்பலில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அவர் இப்போது தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி
ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும் பெப்சி (FEFSI) தலைவருமான ஆர்.கே. செல்வமணி, ``இன்று பல தயாரிப்பாளர்கள் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை நம்பியே படம் எடுக்கிறார்கள். ஆனால், கண்ணன் ரவி 'கதையைக் கேட்டு, அது பிடித்திருந்தால் மட்டுமே படம் பண்ணுவேன்' என்று சொல்வது ஆரோக்கியமான விஷயம்.

ஆர்.பி. சவுத்ரி சார் 50 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது போல, கண்ணன் ரவியும் பல கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். சிறை, TTT போன்ற சிறிய படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாத காலத்திலும் வசூலில் சாதனை படைப்பது நல்ல தொடக்கம். நமது படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பவர்கள் முடிவு செய்யும் சூழல் வரக்கூடாது.

100 ரூபாய் பட்ஜெட் படத்திற்கு 500 ரூபாய் செலவு செய்துவிட்டு, பிறகு ஓடிடி நிறுவனங்களுக்காகக் காத்திருப்பது தவறு. திரையரங்க வசூலை மட்டுமே நம்பி படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கண்டென்ட் வெளிவரும். தமிழ் கலாச்சாரமும் மொழியும் தெரிந்த தயாரிப்பாளர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா வளரும். ஜீவா வழக்கமான டூயட், ஹீரோயின் என இல்லாமல் கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்திருப்பதே பாராட்டுக்குரியது. இயக்குநர் நிஷாந்த் ஒரு சிறிய கதையை நேர்த்தியாகக் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது" எனக் குறிப்பிட்டார்.

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், ... மேலும் பார்க்க

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்... மேலும் பார்க்க

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இ... மேலும் பார்க்க

"எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா!" - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீ... மேலும் பார்க்க

நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

With Love: "உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க