செய்திகள் :

TVK: "நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது!" - விஜய்யை வாழ்த்திய சூர்யா!

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது. இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Suriya
Suriya

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, "மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி, "உங்கள் முதல் தேர்தலில் நீங்கள் பெற்றுள்ள இந்த மிகச்சிறந்த மற்றும் தகுதியான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் தொடர்ந்து உங்கள் அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் நோக்கத்துடன் மக்களை வழிநடத்தவும், ஊக்கப்படுத்தவும், சேவை செய்யவும் வேண்டுகிறேன்.

தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கான உங்கள் பொதுப்பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Chiranjeevi
Chiranjeevi

நடிகர் மகேஷ் பாபு, "புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்றைய முடிவு மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழகத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம். 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்... மேலும் பார்க்க

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க