செய்திகள் :

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

post image

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், 'தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன்.

ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன்.

இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்' என்றார்.

சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், 'முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான்.

இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார்.

திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்' என்றார்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

'பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்' என்றார் செங்கோட்டையன்

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" - சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், "குருவாயூர் தேவசம்... மேலும் பார்க்க

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக கூட்டணியை மேலும் வலுப்ப... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்க... மேலும் பார்க்க

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா... மேலும் பார்க்க

SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந... மேலும் பார்க்க