செய்திகள் :

TVK : 'மக்களிடம் நீதி கேட்ட விஜய்!' - சக்சஸ் கொடுத்த எம்.ஜி.ஆர் பார்முலா!

post image

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை முறியடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தவெக. விஜய் எம்.ஜி.ஆர் பாணியில், 'நீதி வேண்டும்' என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது வெகுவாக எடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

MGR
MGR

1977 இல் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது அதிமுக ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. 1980 இல் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்த பிறகு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலிலும் அதிமுக ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்திருந்தது. திமுக காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி பெரிய வெற்றி பெறுகிறது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. இந்திரா காந்தி பிரதமரானார். உடனடியாக எம்.ஜி.ஆர் அரசு மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்தார்.

1980இல் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில், 'மக்களே நான் என்ன பாவம் செய்தேன். எதற்காக என்னுடைய ஆட்சியை கலைத்தார்கள். எனக்கு நீதி வேண்டும்' என மக்களிடம் நீதி கேட்டு எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்தார். மக்கள் அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கும் அதிமுகவுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆரின் அதே நீதி கேட்கும் பாணியைத்தான் விஜய்யும் பின்பற்றினார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் பிரசாரத்துக்கு வந்த போது எல்லா கூட்டத்திலும் ஒரு வசனத்தை பேசத் தொடங்கினார்.

TVK Vijay
TVK Vijay

'மக்களே உங்களுக்காக நீதி கேட்க வந்த நான், இப்போது எனக்காக உங்களிடம் நீதி கேட்கிறேன். இவர்களின் ஊழலையும் குடும்ப அரசியலையும் கேள்வி கேட்டதை தவிர நான் என்ன தவறு செய்தேன்?' என மக்களிடம் நீதி கேட்டார். சேலம் தொடங்கி YMCA வில் கடைசியாக பேசிய கூட்டம் வரைக்கும் இதைத் தவறாமல் விஜய் பேசியிருந்தார். விஜய்யை எல்லாரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள் எனும் அனுதாபம் மக்கள் மத்தியில் எடுபட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. தேர்தலில் எம்.ஜி.ஆர் பாணி ஒரு வெற்றிகரமான பார்முலா. அதை விஜய் செய்து மீண்டும் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க