செய்திகள் :

TVK: ``விஜய் அலையா அல்லது திமுக எதிர்ப்பு அலையா?" - தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது என்ன?

post image

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பல முக்கியத் தொகுதிகளில் நிலவும் மாற்றங்கள் குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை காலை முதலே தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தவெக, திமுக வேட்பாளர்கள் முதல் இரண்டு இடத்தில் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``வெற்றி பெற்றவர்கள் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில், தோல்வியடைந்த அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ கவலைப்படத் தேவையில்லை.

 ஸ்டாலின் - விஜய்- தவெக
ஸ்டாலின் - விஜய்- தவெக

இது அரசியலில் மிகவும் சாதாரணமானது. நாம் எந்த நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தோமோ, அந்த மக்கள் பணியைத் தொடர்வதுதான் நமக்கு மிக அவசியம். எனது அரசியல் பணி இன்னும் தீவிரமாகத் தொடரும்.

தற்போது நிலவும் இந்தச் சூழலை 'விஜய் அலை' என்று சொல்வதா அல்லது 'திமுக அரசின் மீதான எதிர்ப்பு அலை' என்று சொல்வதா என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம். என்.டி.ஏ கூட்டணியை மக்கள் தேர்வு செய்யவில்லை என்பது உண்மைதான்.

மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட எந்த ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுதான் வாக்குகளாக மாறுகிறது. என்.டி.ஏ கூட்டணி பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. பாஜக கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பெரும்பான்மை கிடைக்கலாம். ஆனால், பெரும்பான்மை கிடைக்காதவர்கள் மக்கள் ஆதரவற்றவர்கள் என்று அர்த்தமல்ல.

மக்களின் நலனுக்காகச் செயல்படும் புதிய அரசியல் கட்சிகள் நல்லது செய்தால் பாராட்டுவதும், தவறுகள் செய்தால் விமர்சிப்பதும், குரல் கொடுப்பதுமே எனது பணியாக இருக்கும். எப்போதும் போல மக்கள் பணி தொடரும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க