செய்திகள் :

``TVK-வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி!" - அமைச்சர் செங்கோட்டையன்

post image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச்சர் விஜய் படைத்துள்ளார். தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அவர், நல்ல ஆலோசனைகளை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

`ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுத்தார்கள. இப்போது ஜனநாயகத்தைக் காக்கும் தலைவராகவே விஜய் வந்துள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ஆட்சி அமைக்க 118 பேருடன் வாருங்கள் என்று ஆளுநர் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன்

47 பேரை வைத்துக்கொண்டு ஒருவரை முதலமைச்சர் என்று சொன்னால் 108 பேரை வைத்துக்கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா? தி.மு.க- வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்து முதலமைச்சராகத் திட்டமிட்டால் நாங்கள் விடுவோமா?

நமது ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்தால் வரும் காலங்களில் 234 தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெறும். ஏற்கனவே அ.தி.மு.க- விலிருந்து 6 எம்.எல்.ஏ- க்கள் விலகி த.வெ.க - விற்கு வந்துவிட்டனர். மேலும் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ -க்கள் த.வெ.க- வில் இணைய ரெடியாக உள்ளனர். மொத்தமாக 25 எம்.எல்.ஏ- க்கள் இங்கு வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள். பலரும் த.வெ.க- வில் இணைந்து வருவதால் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள். வேறு யாரும் இருக்க மாட்டார்கள்" என்றார்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க