செய்திகள் :

TVK: ஷாக் கொடுக்கும் தவெக; முதல் ஒரு மணி நேரத்தில் தலைகீழாக மாறுகிறதா களம்? - என்ன சொல்கிறது?

post image

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான மே 4-ம் காலை இது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒரு மிகப்பெரிய அதிர்வலையைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, 'கோட்டை' என்று கருதப்பட்ட பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதற்சுற்று முடிவுகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் நோக்கர்களை மலைக்க வைத்துள்ளது.

Stalin

வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து வரும் முதற்கட்டத் தகவல்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்குமே கடும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

குறிப்பாக, நகர்ப்புறத் தொகுதிகளில் த.வெ.க-வின் கை ஓங்கியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிகேணி, தி.நகர், அண்ணா நகர், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் எனத் தொடர்ந்து தவெக முன்னிலை வகித்து வந்தது.

சவால்களை முறியடிக்குமா திமுக?

ஆவடி, சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் போன்ற தொகுதிகளில் திமுக தனது முன்னிலையைத் தக்கவைத்திருந்தாலும், பல இடங்களில் தவெக-வின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது தி.மு.க-வின் ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பாதிக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக, "அசைக்க முடியாத கோட்டை" என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தி.மு.க-வை விட முன்னிலை வகிப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க