மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபர...
TVK Vijay: `கரூர் சம்பவம் குறித்து எங்கள் புகார்களைக் கொடுத்திருக்கிறோம்' - சி.டி.ஆர்.நிர்மல் குமார்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அங்கமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று மத்தியப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் எனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எங்களுடைய தலைவருக்கு விட்னஸ் சமன் வந்திருந்தது. அதன் அடிப்படையில எங்களுடைய தலைவர் நேற்று டெல்லியில் சி.பி.ஐ அலவலத்தில் ஆஜராகி அவர்களுக்குத் தேவையான விளக்கத்தை அளித்தார்.
மேலும், இந்த வாரம் பொங்கல் நிகழ்ச்சி இருக்கிறது. ஜனநாயகன் படம் ரிலீஸ் சம்பந்தமாகவும் எங்களுடைய தலைவருக்குப் பல கூட்டங்கள் இருக்கிறது. அதனால், நாங்களே வேறு ஒரு தேதிக்கு விசாராணையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதன் அடிப்படையில் அடுத்த வாரம் வேறு ஒரு தேதியில் மீண்டும் ஒரு நாள் ஆஜராகி, தேவையான விளக்கத்தைத் தருவோம்.
கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, காவல்துறையும், முதல்வருமே மாற்றிப் மாற்றி பேசுகிறார்கள் என்பதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம். சட்டமன்றத்தில் முதல்வர் 607 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகச் சொல்கிறார். காவல்துறை அதிகாரி டேவிட்சன் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகச் சொல்கிறார். ஒரு சாதாரண விஷயத்திலேயே எவ்வளவு முரண்பாடுகள்.

இந்த விதத்தில் கரூர் சம்பவத்தில் நிறைய தவறுகள் நடந்திருக்கிறது. அது சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் கொடுத்திருந்தோம். கரூர் சம்பவத்தில் போஸ்ட்மார்ட்டம் செய்வதிலும் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் முன்தேதியிட்ட படிவங்களில் மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அது குறித்தும் சி.பி.ஐ-யிடம் நாங்கள் எங்களுடைய புகார்களைத் தெரிவித்துள்ளோம்.
எங்களுடைய தலைவருடைய கடைசி படம். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, அது குறித்து விரிவாகப் பேசுவோம். படம் அமைதியான முறையில் வெளியாகி மக்களிடம் சென்று சேரவேண்டும். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

















