'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் ...
ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும் இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?
கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் தற்போது அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர் அந்த நாட்டு மக்கள்.
ட்ரம்ப
இதில் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
மேலும், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், இதுவரை காணாத தாக்குதலை ஈரான் காணும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ட்ரம்ப்.
அடுத்ததாக, தனது வழக்கமான அஸ்திரமான 'வரி'யை ஈரானிற்கு எதிராக ஏவியுள்ளார் ட்ரம்ப்.
அதாவது, ஈரான் உடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் உடனடியாக 25 சதவிகித வரி அமலுக்கு வருகிறது என்று தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவிற்குப் பாதிப்பா?
இந்த உத்தரவால் இந்தியாவும் நிச்சயம் பாதிக்கப்படும்.
இந்தியா பாஸ்மதி அரிசி, அரிசி, டீ, சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஈரானிலிருந்து பேரீச்சம்ப்பழம், கிவி, பிஸ்தா, ஆப்பிள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.
2024-ம் ஆண்டின் தரவுகளின்படி, 698.51 மில்லியன் டாலர் அளவிற்கு ஈரானுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா.
இதுபோக, டீ, காபி, மசாலாக்களை 73.93 மில்லியன் டாலர்களுக்கும், பழங்களை 66.12 மில்லியன் டாலர்களுக்கும், இயந்திரங்களை 32.65 மில்லியன் டாலர்களுக்கும் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இறக்குமதி
86.48 மில்லியன் டாலருக்கு எண்ணெய் சார்ந்த பொருள்களையும், 55.65 மில்லியன் டாலருக்கு உப்பு, கற்கள், சிமெண்ட், பிளாஸ்டர் போன்ற பொருள்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.
இந்த ஏற்றுமதிப் பட்டியல்களும், இறக்குமதிப் பட்டியல்களும் இன்னும் நீள்கின்றன.
இந்தியாவிற்கு 75 சதவிகிதமா?
இப்போது ஏற்கெனவே ரஷ்ய இறக்குமதிகளால் 25 சதவீத வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவீத வரியைச் சந்தித்து வருகிறது இந்தியா.
இதில் இந்த 25 சதவீத வரியும் சேர்ந்தால் 75 சதவீத வரியாக மாறும்.
இதை இந்திய அரசு அப்படியே விட்டுவிடாது. நிச்சயம் ஏதாவது முடிவெடுக்கும்.
ஆனால், அந்த முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது பாசிட்டிவ் ஆனதா... நெகட்டிவ் ஆனதா என்பது இந்தியாவின் முடிவைப் பொறுத்தே அமையும்.
















