செய்திகள் :

TVK Vijay: "விஜய் சார் வரணும்னு ஆசை இருக்கு" - தமிழ்நாடு தேர்தல் குறித்து ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

post image

'ஜெகமே தந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.

தற்போது இவர் தமிழில், விஷ்ணு விஷாலுடன் 'கட்டா குஸ்தி 2', அர்ஜுன் தாஸுடன் 'லவ்' வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.

கட்டா குஸ்தி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி
கட்டா குஸ்தி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், மக்கள் எதிர்பார்ப்புடன் முடிவுகளை நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி, தவெக தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என ஆசை இருப்பதாகப் பேசியிருக்கிறார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, "எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். நான் கேரளாவைச் சேர்ந்தவள். எனக்கு இங்கு ஓட்டு கிடையாது. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இந்த ஒரு முறை தமிழ்நாட்டில் வாக்களித்திருக்கலாம் என்று தோன்றியது. அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளும் , பிரார்த்தனைகளும் இருக்கின்றன.

அவருக்கு அரசியலுக்கு வர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவர் மிகவும் கம்போர்ட்டாக, மக்களின் அன்பு மற்றும் ஆதரவோடு இருக்கிறார்.

Aishwarya Lekshmi
Aishwarya Lekshmi

அவருக்கு மக்கள் மீது ஓர் அன்பு இருக்கிறது. அதனால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

அவருக்கு இவ்வளவு கொடுத்த மக்களுக்கு, திருப்பி நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டும்" என்றவரிடம்,

"விஜய் வெல்வார் என நினைக்கிறீர்களா?" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை இருக்கிறது. என்னுடைய பிரார்த்தனைகளும் அவருக்கு உண்டு" எனப் பேசியிருக்கிறார்.

RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம். 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்... மேலும் பார்க்க

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க