செய்திகள் :

`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

post image

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று.

ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை.

ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம்

என்ன சொல்கிறார்?

“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும்.

காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை.

அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள்.

அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும்.

ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல.

அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து

இந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும்.

கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”.

ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர்.

அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க