TVK Vijay எதிர்த்து NDA-வில் PMK போட்டி! | அமைச்சர் நேருவுக்குத் தொடரும் நெருக்க...
UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் King Makers பூமிநாதன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல்துறை தலைவர்) சிறப்புரை ஆற்றயிருக்கிறார்.
திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனை வழங்க இருக்கும் சத்யஸ்ரீ பூமிநாதன் அவர்கள் தமிழகத்தின் முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் ஒன்றான King Makers IAS அகாடமியின் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் ஆவார்.
பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கல்வியாளர் என்பதைத் தாண்டி, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பேச்சாளராகவும் இருக்கிறார்.
அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், அவர்களுக்குத் தேவையான மன உறுதி, ஆளுமைத் திறன் மற்றும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றை வழங்குவதில் இவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் மாணவர்கள் ஐஏஎஸ் கனவை நனவாக்க வேண்டும் என்பதில் இவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவரது வழிகாட்டுதலில் செயல்படும் King Makers IAS அகாடமி , நவீன தொழில்நுட்பம் மற்றும் முறையான திட்டமிடல் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.




















