செய்திகள் :

US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு

post image

அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Worklife Descrimination
Worklife Descrimination

பிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.


அம்ருதேஷ் வல்லபனேனி வழக்கு தொடர உதவிய ஆலோசகர் ஜெய் பால்மர், "இந்திய தொழிலாளர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காவில் தங்குவதாக இருப்பதால், இது அவர்களுக்கு ஸ்க்விட் கேம் போன்றது." என ஊடகத்தில் பேசியுள்ளார்.

மேலும் அவர், "இந்திய சி.இ.ஓக்கள் அவர்களின் சொந்த நாட்டு சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர். இது மிகவும் கொடிய சுரண்டல் கலாச்சாரம்" என்றும் பேசியுள்ளார்.

பால்மர் இதற்கு முன் சில தொழிலாளர் கடத்தல் குற்றங்களையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

America
America

சிரிசாஃப்ட் என்ற நிறுவனம் வல்லபனேனியை ஹெச்-1பி விசா தருவதாகக் கூறி வேலைக்கு சேர்த்துள்ளது. பின்னர், அவரை வெவ்வேறு நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தில் கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது.

கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, தொழிலாளர் கடத்தல் மற்றும் விசா ஆவணங்களை நிறுத்தி வைப்பது போன்ற குற்றங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வல்லபனேனியின் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், வழக்கமான கட்டணத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இதுபற்றிய அறிக்கைக்கு சிரிசாஃப்ட் (Siri Software Solutions) நிறுவனம் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை.