செய்திகள் :

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

post image

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உருகுவதால் ஏற்படும் கடல் வழித்தடமும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தை சொந்தமாக்கிவிட வேண்டும் எனப் பலத் திட்டங்களை செயல்படுத்த முயன்றுவருகிறார்.

கிரீன்லாந்து
கிரீன்லாந்து

குறிப்பாக, கிரீன்லாந்தின் பொருளாதாரச் சூழலை சாதமாக்கி கிரீன்லாந்து குடிமக்களுக்கு பணம் கொடுப்பது, அல்லது டென்மார்க் மீது அரசியல் அழுத்தம் ஏற்படுத்தியோ, இராணுவம் மூலமோ அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார் ட்ரம்ப். அதற்கு டென்மார்க், கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஐ.நா-வும், "ஐ.நா-வின் கொள்கைக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அந்த நாட்டின் மீது உரிமை இருக்க வேண்டும். இப்போது நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக கிரீன்லாந்தை எளிதான வழியிலோ, அல்லது கடினமாக வழியிலோ அடைவோம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்கா ஏற்கனவே கிரீன்லாந்தில் ராணுவ தளம் வைத்துள்ளது, ஆனாலும் முழு உரிமையும் வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதது. கிரீன்லாந்தின் எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் நிரம்பியுள்ளது. நான் சீன மக்களையும், ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால் கிரீன்லாந்தில் அவர்கள் எனக்கு அண்டை நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை, அது நடக்காது. எனவே, நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.

AjithKumar: "அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்"- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார். து... மேலும் பார்க்க

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒர... மேலும் பார்க்க

அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்'- ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து ப... மேலும் பார்க்க