செய்திகள் :

Vadhandhi 2: "தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா!" - சசிகுமார் கலகல

post image

கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் வருகிற 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Vadhandhi 2
Vadhandhi 2

இந்த சீசனில் சசிகுமார், அனகா, அபர்ணா தாஸ், ரேவதி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய சசிகுமார், "படம் பண்றதுக்கும் வெப் சீரிஸ் பண்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. படம்னா ரெண்டரை மணி நேரம்தான், ஆனா வெப் சீரிஸ் அஞ்சு மணி நேரம் வரும்.

அதனால் வொர்க் லோடு ரொம்பவே அதிகம். 'பேசாம பேமெண்ட் கொஞ்சம் ஜாஸ்தி கேட்டிருக்கலாமோ?'ன்னு கூட நான் அப்புறமா யோசிச்சேன். பகல்-இரவு பாராமல் உழைத்தால் மட்டும்தான் வெப் சீரிஸுக்கான கண்டென்ட்டைக் கொண்டுவர முடியும்.

இதுக்கு முழு காரணமும் டைரக்டர் ஆண்ட்ரூதான். அன்னைக்கு எத்தனை சீன் எடுக்கணுமோ, அத்தனையும் அவர் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கும்.

Sasikumar - Vadhandhi 2
Sasikumar - Vadhandhi 2

காலை 7 மணிக்கு என்ன எனர்ஜியோட வேலையை ஆரம்பிக்கிறாரோ, அதே எனர்ஜியோடதான் இரவு 12 மணிக்கும் இருப்பாரு.

அவருடைய அந்த எனர்ஜிதான் எங்க எல்லாரையும் ஓட வச்சது" என்றவர், 'அரசியலுக்கு வருவீர்களா?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அமேசான் பிரைம்ல எல்லாமே மாறிடுச்சு. ஆனா நிருபர்களோட இந்தக் கேள்வி மட்டும் மாறவே இல்லை.

எங்களுக்குப் புரோட்டோகால் போடுற மாதிரி, இந்த மாதிரி கேள்விகள் கேட்கக் கூடாதுன்னு நிருபர்களுக்கும் அமேசான் ஒரு புரோட்டோகால் போடணும். (சிரித்துக் கொண்டே) தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா. நான் நடிக்க வந்திருக்கேன். அதை மட்டும்தான் பண்றோம்!" என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க