செய்திகள் :

Vibe With MKS: "எனக்கு பிடித்த கார்.!"- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார். 

அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.

Vibe With MKS
Vibe With MKS

அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் 'ஃபியட் செலக்ட்' காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்.

நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக்கொண்டு போனேன். பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு.

கோயம்புத்தூரில் பழைய கார்களை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பார்கள். கோயம்புத்தூர் போய் கார் வாக்கிகொண்டு இங்கே வந்து ஒரு ஆறு மாதம், 7 மாதம் ஓட்டுவேன். அதற்கு பிறகு விற்றுவிட்டு, மறுபடியும் பழைய கார் வாங்கப் போவேன்.

இளைஞரணியில் நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஐந்து, ஆறு பேர் குழுவுடன் சுற்றுப் பயணம் போனேன். அப்படி போகும்போது டிரைவரை அடுத்த வண்டியில் வரசொல்லிவிட்டு, நான்தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவேன்.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

அதிலும் இரவில் வண்டி ஓட்டுவதில் எனக்கு ரொம்ப பிரியம், என்னை நம்பி எல்லாரும் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். டிரைவரை கார் எடுத்து திருப்பிவிடுவது, துடைத்து வைப்பது இதற்குதான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஒரு நாள் டிரைவர் வேடிக்கையாக சொன்னார், சார் நான் கார் ஓட்டுவதையே மறந்துவிட்டேன், அதனால் நான் எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப்... மேலும் பார்க்க

`8'-இல் `2' தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் அவிநாசி மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். மீதமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆ... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க

"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்

வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். அடம் பிடித்த ட்ரம்ப்தனக்கு அமைதிக்... மேலும் பார்க்க

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நட... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடை... மேலும் பார்க்க