அலங்காநல்லூரில் சீறி பாய்ந்த காளைகள்... துணிந்து நின்ற வீரர்கள்! | ஜல்லிக்கட்டு ...
Vikatan : இந்தவாரம் தொடங்கப்பட்ட `புதிய' ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? | முழுத் தொகுப்பு
விகடன் இணையதளத்தில் இந்த வாரம், தினம் தினம் `தொடர்' என புதியதாக 8 தொடர்களின் முதல் அத்தியாயம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நீங்க எதையாவது மிஸ் பண்ணிட்டீங்களா...? நோ ப்ராப்ளம். இங்கே முதல் வார தொடர்களின் தொகுப்பை காணலாம்..!

தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியிலிருந்துதான் தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது என்பது கடந்த கால அரசியல் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், திமுகவின் எழுச்சி மற்றும் அண்ணாவின் முதல் தேர்தல் வெற்றியின் பின்னணியில் தமிழக அரசியலின் அதிகம் அறியப்படாத இன்னொரு பக்கமும் உள்ளது - அது, கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி. இரு கட்சிகளும் பொதுவுடமை கருத்துகளையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியது எங்கே, இதில், அண்ணாவின் பங்களிப்பு என்ன?
அண்ணாவுக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே...
க்ளிக்: அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

குழம்பி நிற்கும் காங்கிரஸ். ரீல் ஓட்டும் பிரேமலதா. 'மெகா கூட்டணி' என மணற் கோட்டை கட்டும் எடப்பாடி. கூட்டணி வலுவாக இருக்கிறது என தினசரி அலாரம் போல அலறும் திமுக. கூட்டணிக்காக காத்திருக்கிறது தவெக.
கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது 'கூட்டணி சர்க்கஸ்' - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!'
க்ளிக்: தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது.
அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்!
க்ளிக்: ஆங்காரிகளின் கதை 01: முண்டம்புள்ளி... பாவச்சோறு... நடுவீட்டுகாரங்க! - 'கன்னியம்மை' தெய்வமான கதை

கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.
க்ளிக்: கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01

மேட்டூர் அணை கட்டிய வரலாற்றை முழுமையாக பதிவு செய்து, பொறியாளர்களின் உழைப்பு, தொழிலாளர்களின் வியர்வை, இடம்பெயர்ந்த மக்களின் கண்ணீர், சட்டமன்ற விவாதங்கள், பொது நலத் திட்டங்கள் – அனைத்தையும் ஒன்றாகக் கூறும் வரலாற்றுப் பதிவுக்கு வாசகனை அழைக்கும் ஓர் அழைப்பு:
“வருக, காவிரியோடு பயணிப்போம்!”
அணை ஓசை : இது வளம் பெருக்கும் மேட்டூர் அணையின் கதை! - பகுதி 01

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!
நினைவுச் சுவடுகள் :மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார்.
இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன.
1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..!
Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்
'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02



















