`அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படி படம் எடுப்பதுன்னு சொன்னாங்க; அந்த நேரத்துல என்...
Vikatan Digital Awards 2026: ``போன வருடம் நாமினேஷன்ல இருந்தேன்; இந்த வருடம் வாங்கிட்டேன்" - ஜெனி
நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான சமூக ஊடகப் பிரபலம், மேரி ஜெனிஃபருக்கு, `Best Solo Performer (Female) விருது’ வழங்கப்பட்டது.

சின்னத்திரை நடிகை சுஜிதா வழங்க, மேரி ஜெனிஃபர் விருதைப் பெற்றுக்கொண்டார். விருதை வழங்கிய சுஜிதா பேசுகையில் "டிஜிட்டல் அவார்ட் என்பது சாதாரண விஷயமல்ல. ஆஸ்கர் விருதுக்கு இணையாக இதைச் சொல்லலாம்" என்று கூறினார். விருதைப் பெற்ற மேரி ஜெனிஃபர் பேசுகையில், "விகடன் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமானது. போன வருடம் நாமினேஷனில் இருந்தேன். இந்த வருடம் அவார்ட் வாங்கிவிட்டேன்" என்று மகிழ்ச்சியோடு கூறினார்.


















