செய்திகள் :

Viswanath & Sons: "கார்த்திக்கு அந்த டைம்ல ராதிகா அக்கா தான் உதவி பண்ணாங்க.!"- சூர்யா ஷேரிங்

post image

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, " என் செல்லங்களா... கண்ணுங்களா... என் சாமிங்களா... ஆடியோ லான்ச் ஃபங்ஷனை ஒரு திருவிழா மாதிரி மாத்திட்டீங்க.

ஒரு காரணத்துக்காக என் பிறந்தநாளை நான் கொண்டாடுல, இருந்தாலும் தமிழ்நாடு முழுசும் என் பிறந்தநாளுக்காக நீங்க பண்ணின எல்லாத்தையும் பார்த்தேன்.

'விஸ்வநாத் & சன்ஸ்'
'விஸ்வநாத் & சன்ஸ்'

5000 பேருக்கு மேல இரத்த தானம் பண்ணிருக்கிங்க. 40,000 பேருக்கு மேல உங்கனால பயன் அடைஞ்சுருக்காங்க. குட்டி குட்டி குழந்தைகளைக் கடைக்கு கூட்டிட்டு போய் அவங்களுக்கு துணிகள் வாங்கி கொடுத்துருக்கிங்க. எல்லாமே நான் பார்த்திட்டு தான் இருக்கேன். இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

'கருப்பு' படத்துக்கு பிறகு உங்களை இன்னைக்கு தான் பார்க்கிறேன். 'கருப்பு' படத்தை இவ்வளவு பெரிய வெற்றி அடைய வெச்ச குட்டீஸ்க்கும்,பெரியவங்களுக்கும் கட்டி பிடிச்சு ஒரு நன்றிய சொல்லிக்கிறேன். 'கருப்பு' படத்தோட நூறாவது நாள் வரப்போகுது. அதற்காகச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்திட்டு இருக்கு. அதுவும் கூடிய விரைவில் நடக்கும்‌" என்றிருக்கிறார்.

தொடர்ந்து ராதிகா குறித்து பேசிய அவர், "ராதிகா அக்கா கூட நிறைய அனுபவங்கள் இருக்கு. முன்னாடி என்னோட ரெண்டு, மூன்று படங்களுக்கு, இப்பத்தான் நடிக்க வரார்னு காசு வாங்காம சும்மா நடிச்சு கொடுத்தாங்க.

கார்த்தி படிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு போகனும்' னு இருந்தான். ஆனால் அப்போ வெளிநாடு போக பேங்க்ல ஒரு டெபாசிட் இருக்கனும். அந்த டெபாசிட் அளவு எங்ககிட்ட அப்போ காசு இல்ல.

அப்பாவும், ராதிகா அக்காவும் சீரியல்ல ஒன்னா நடிச்சிட்டு இருந்தாங்க. ராதிகா அக்கா தான் அந்த டெபாசிட் பணத்தை கொடுத்தாங்க. கார்த்திக்கு அட்மிஷன் கிடைக்கிற வரைக்கும் இந்த பணம் உங்க பேங்க்ல இருக்கட்டும்'னு உதவி செஞ்சாங்க‌. சொல்ல முடியாத நெறைய நினைவுகள் அவங்களோட எனக்கு இருக்கு" என்று பகிர்ந்திருக்கிறார்.

சூர்யா
சூர்யா

மேலும் மமிதா பைஜூ குறித்து பேசிய சூர்யா, " இந்தப் படம் கதை கேட்ட உடனே நாங்க யாரையுமே இந்தக் கதாபாத்திரத்துக்கு யோசிச்சு பார்க்கல. உங்க பேரை தவிர வேறு எந்த பேரும் எங்களுக்கு ஆப்ஷன்லையே இல்ல.

நம்ம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ண வேண்டியதா இருந்தது. ஆனால் அது நடக்கலைன்னு வருத்தம் இருந்தது. இந்தப் படத்துல "You are Like a Magic" தமிழ் உச்சரிச்சு, அழகா பேசி டப்பிங்கும் ரொம்ப நல்லா பண்ணிருக்கிங்க.

மமிதாவுக்கும், ராதிகாவுக்கும் இருக்க கெமிஸ்ட்ரி இன்னொரு ஸ்பெஷல்" என்று பேசியிருக்கிறார்.

தவிர பட இயக்குநர் வெங்கி அட்லூரி குறித்து பேசிய அவர், "எனக்கு விஸ்வநாத்&சன்ஸ் இன்னொரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது வெங்கி. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி படம் பண்ணி... அவரோட எழுத்து மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு. இந்தப் படம் உறவுகளை பத்தி அவ்வளவு அழகா பேசும்.

இந்தப் படம் பார்க்கும் போது உங்க உதட்டு ஓரத்துல ஒரு புன்சிரிப்பு படம் முழுசும் இருக்கும். ரொமான்ஸ் பத்தி பேசும், பேமலிஸ் பத்தி பேசும். ஹீரோ எலிவேஷன் குறையவே குறையாது. ஒரு ஹோல்சம் என்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் இருக்கும்" என்றிருக்கிறார்.

சூர்யா
சூர்யா

பிறகு லவ் அட்வைஸ் கொடுத்த சூர்யா, " தினம் தினம் லவ் பண்ணணும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணணும். அவங்களுக்கு மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். நம்மளும் மாறுவோம் அவங்களும் மாறுவாங்க.

20 வயசுல இருக்கிறது வேற, 25 வயசுல இருக்கிறது வேற...பல விஷயங்கள் வாழ்க்கைல மாறிட்டே இருக்கும். அன்பும் அவங்க மேல இருக்க காதலும் என்னைக்கும் மாறவே கூடாது.

ஒரு ஆண் ஒரு இடத்துக்கு போகனும்னா வண்டி எடுத்துட்டு ஒரு மணி நேரத்துல போயிடலாம். ஆனால் அதே ஒரு பெண் அந்த இடத்துக்கு போகனும்னா பத்து மணி நேரம் கூட ஆகலாம். ஏன் சொல்றேனா ?

கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து... வீட பாத்துக்கிட்டு எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணுறது பெண்கள் மட்டும் தான். பெண்களோட வெற்றிக்கு பத்து மடங்கு இல்ல, நூறு மடங்கு சல்யூட் அடிச்சு மரியாதை கொடுங்க. அவங்களோட வெற்றிக்காக காதலை விட மரியாதை நிறையக் கொடுங்க" என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க