WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு.
அவை என்ன?
> இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்... அதுவும் ஆக்டிவாக இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்த ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
> ஒருவேளை, இந்த ஆப்களை கணினியில் பயன்படுத்தினால், இனி ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் தானாகவே 'லாக் அவுட்' ஆகும். அதன் பின், நம் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து 'லாக் இன்' செய்துகொள்ள வேண்டும்.

சமூக வலைதள நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் படி, சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது ஆப் வைத்திருக்கும் பயனாளர்கள், ஆப்பில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணை வைத்திருக்கிறார்களா... அது ஆக்டிவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை அடுத்த 90 நாள்களுக்குள் எடுக்க வேண்டும்.
இது குறித்த அறிக்கையை சமூக வலைதள நிறுவனங்கள் அடுத்த 120 நாள்களுக்குள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் கெடுபிடிகளின் நன்மை என்ன?
சைபர் குற்றங்களைப் பெருமளவு குறைக்கலாம்.
சம்பந்தப்பட்ட நபரை தவிர பிறர் மெசேஜிங் ஆப்களை பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
என்ன பிரச்னை?
ஒரே மொபைல் எண் வைத்து பல சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிய பிரச்னை.
ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் 'லாக் அவுட்' ஆனால், இது பயனாளர்களுக்கு அசௌகரியமாக அமையலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யாமல்... ஆக்டிவாக வைத்திருக்காமல், நம்பரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்களா? சீக்கிரம் ரீசார்ஜ் செய்து ஆக்டிவ் ஆக்குங்கள்.
இந்த மாற்றங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? கமென்ட்ல சொல்லுங்க!


















