செய்திகள் :

Youth: `சந்தோஷமாக இருக்கு கென், ஆனா அதைவிட அம்மாவுக்கு ரொம்ப பயமா இருக்கு!'- கலங்கிய கிரேஸ் கருணாஸ்

post image

கென் கருணாஸ் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கிரேஸ் கருணாஸ், "என் பையனுக்கு 'அசுரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது வெற்றிமாறன் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார்.

'இந்தப் படத்தில் அவர் நடித்தால் +2 தேர்வு எழுத முடியாமல் போகலாம். அதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் சொல்லுங்கள். ஆனால் இந்த படத்தில் நடித்தால் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கும்' என்று சொன்னார்.

யூத் படத்தில்...
யூத் படத்தில்...

நானும் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன். பிறகு நான் வெற்றிமாறனிடம் என் பையன் எப்படி நடிக்கிறார் என்று கேட்டேன்.

அதற்கு அவர் ஒரு விஷயம் சொன்னார். 'எல்லாரும் நல்லா நடிக்கிறான் என்று சொல்லி அவனை ஏத்தி விடுறாங்க. ஆனால் தனுஷ் அவனை மகனாக பார்க்க ஆரம்பிச்சிட்டார்.

இவன் அவரை அப்பாவாக பார்க்க ஆரம்பிச்சிட்டான் என்றால் நல்ல விஷயம். தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் எல்லா விஷயமும் கத்துக்கலாம். அவருடன் இருந்தால் நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமா பற்றி நிறைய கத்துக்குவான்' என்று சொன்னார்.

நான் இன்று இந்த மேடையில் வந்து இப்படி பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. என் மகன் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறனும் தனுஷும் தான்.

கிரேஸ் கருணாஸ்
கிரேஸ் கருணாஸ்

கென் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதைவிட அம்மாவுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக வரும் என நம்புகிறேன். எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்று கண்கலங்கி பேசியிருக்கிறார்.

கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' - சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் ... மேலும் பார்க்க

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன... மேலும் பார்க்க

கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் ச... மேலும் பார்க்க

Youth: "நான் 'அசுரன்' படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!"- கென்னை கலாய்த்த தனுஷ்

'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்த... மேலும் பார்க்க

பேரும் புகழும் காதலியும் தந்த ஜப்பானில் செட்டில் ஆகிட்டேன்!- 'போடா போடா புண்ணாக்கு' பாடிய‌ நீலகண்டன்

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ஒரு படம் 'என் ராசாவின் மனசிலே'. ராஜ்கிரண் தயாரித்து நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்தார் மீனா. படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா. நடிகர் வடிவேலுவின்... மேலும் பார்க்க

என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந... மேலும் பார்க்க