செய்திகள் :

அரக்கோணம்: தவெக தொடர்ந்து முன்னிலை; தடுமாறும் அதிமுக; விசிக-வுக்குத் தொடரும் தோல்வி முகம்!

post image

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்றிருக்கிறார் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரான சு.ரவி.

சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவியே இந்த முறையும் போட்டியிட்டார். அதேபோல, தி.மு.க கூட்டணியில் வி.சி.க சார்பாக எழில் கரோலின், நா.த.க-வில் ராஜ்குமார், த.வெ.க-வில் காந்திராஜ் களமிறங்கினார்கள்.

கடந்த தேர்தலின்போது, வி.சி.க 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-விடம் தோல்வியடைந்த நிலையில், இந்த முறையும் தொகுதிக்கு முன்பின் அறிமுகமில்லாத எழில் கரோலின் சென்னை மாடம்பாக்கத்தில் இருந்து களமிறக்கப்பட்டது, வி.சி.க-வுக்குத் தோல்வி முகத்தையே கொடுத்திருக்கிறது.

வி.சி.க வேட்பாளரை விடவும் த.வெ.க வேட்பாளர் காந்திராஜிக்கு உள்ளூர் செல்வாக்கு அதிகம். இதனால், களத்தில் அ.தி.மு.க-வுக்கும், த.வெ.க-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்டது.

காந்திராஜ் - சு.ரவி
காந்திராஜ் - சு.ரவி

அதைபோலவே, இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையிலும் த.வெ.க தொடர்ந்து முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறது. முதல் சுற்றில் த.வெ.க வேட்பாளர் காந்திராஜ் 3,699 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க வேட்பாளர் சு.ரவி 2,983 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், வி.சி.க வேட்பாளர் எழில் கரோலின் 2,626 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள்.

தொடர்ந்து, 6-வது சுற்றுவரை த.வெ.க வேட்பாளரே முன்னிலை வகித்து வருகிறார். 7-வது சுற்று முடிவில் த.வெ.க 27,393 வாக்குகளும், அ.தி.மு.க 19,830 வாக்குகளும், வி.சி.க 17,207 வாக்குகளும் பெற்றிருந்தது.

அதன்படி, 7,563 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் காந்திராஜ் முன்னிலையில் இருக்கிறார். மூன்று முறை தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டிருந்த சு.ரவி இந்த முறையும் தெம்போடு களம்கண்ட நிலையில் த.வெ.க-வுக்குப் பதிவாகியுள்ள வாக்குகள் அவருக்குக் களக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க