செய்திகள் :

''அறியாமையில் செய்கிறார்கள்" - படங்களுக்கு அனுமதி மறுத்த மத்திய அமைச்சகம்; கண்டனம் தெரிவிக்கும் IFFK

post image

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்.

இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் இங்கு திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

பாலஸ்தீன் 36
பாலஸ்தீன் 36

'பாலஸ்தீன் 36', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் காஸா', 'வஜிப்' ஆகிய திரைப்படங்களுடன் 1925-ம் ஆண்டு வெளியான 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தையும் இந்த நிகழ்வில் திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

அத்தோடு 'சந்தோஷ்', 'பீஃப் (ஸ்பானிஷ் திரைப்படம்)' உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

இப்படியான திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்பட விழாக் குழுவின் துணைத் தலைவர், "மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு 187 திரைப்படங்கள் அனுப்பப்பட்டன.

இன்னும் 14 திரைப்படங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட் எடுத்து, பதிவு செய்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இது பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது." என வருத்தங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

இவரைத் தொடர்ந்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், "இவை அனைத்தும் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகள்.

இவற்றை திரையிட முடியாது என அறியாமையில் சொல்கிறார்கள்.

'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தை, சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். அதிகாரிகள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்." என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

``நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்தேன்!" - நடிகர் திலீப் விடுதலையான வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ல் படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சம்பவம் அப்போது அதிர்வலையை ஏற்படு... மேலும் பார்க்க

"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப்

'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " பாலிவுட் மட்ட... மேலும் பார்க்க

Mohan lal:``எங்கள் அன்பான லாலுவுக்கு" - வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த வி... மேலும் பார்க்க

Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்?

கொலை செய்யும் சீரியல் கில்லரை காவல் அதிகாரி தண்டிப்பதே மம்மூட்டி, விநாயகன் நடித்திருக்கும் இந்த மல்லுவுட் படைப்பின் ஒன்லைன்.நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்டீபன் தாஸ் (மம்மூட்டி)... மேலும் பார்க்க

"அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர்" - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மத... மேலும் பார்க்க