செய்திகள் :

ஆந்திராவில் பில் கேட்ஸ்: `சுகாதாரம் முதல் AI தொழில்நுட்பம் வரை' - ஆலோசனை செய்த சந்திரபாபு நாயுடு!

post image

மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான பில் கேட்ஸ் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தார். கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை, ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள மாநிலச் செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் மாநிலச் செயலகத்தில், துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சரவை சகாக்களைப் பில் கேட்ஸிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.

சந்திரபாபு நாயுடு - பில்கேட்ஸ்
சந்திரபாபு நாயுடு - பில்கேட்ஸ்

இந்தச் சந்திப்பின் போது, ஆந்திர அரசின் பல்வேறு நிர்வாக முயற்சிகளில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தற்போது நடைபெற்று வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, டிஜிட்டல் கல்வி முறைகளை மேம்படுத்துவது, நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆந்திர அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் 'ரியல் டைம் கவர்னன்ஸ் சிஸ்டம்' (RTGS) மையத்தைப் பில் கேட்ஸ் பார்வையிட்டார். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், "ஸ்வர்ண ஆந்திரா 2047" என்ற தொலைநோக்குப் பார்வை குறித்தும், மருத்துவத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டுவரும் 'சஞ்சீவானி' திட்டம் குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார்.

பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு
பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு

செயலகக் கூட்டத்திற்குப் பிறகு, அமராவதி அருகே உள்ள உண்டாவல்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குப் பில் கேட்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விவசாயத்தில் ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏற்கனவே ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு இரண்டு முறை வந்துள்ள பில் கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று தற்போது மூன்றாவது முறையாக ஆந்திரா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`40 வருஷமா இந்த மூங்கில்தான் எனக்கு சோறு போடுது' - கைவினைத் தொழிலைக் கை விடாத மதுரை வீரன்!

கைவினை கலைக்கு பேர்போன மதுரையில், பெரியார் பேருந்து நிலையம் அருகில் திருப்பரங்குன்றம் சாலையோரத்தில் கட்டையை ஊன்றி அழகாக பூவைத் தொடுப்பதுபோல மூங்கிலில் வேலை செய்துகொண்டிருந்த சுவாரஸ்யமான ஒருவர் தென்பட்... மேலும் பார்க்க

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2025: ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்வுடன் தொடங்கிய விழா! | Live

ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்வு!நாணயம் விகடன் விருது 2025தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் நாணயம் விகடன், 9-வது ஆண்டாக நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2025 நிகழ்ச்சியை இன்று (... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் சாமியானா பந்தல்; நலிந்து வரும் தென்னந்தட்டி தொழில் - தொழிலாளர்களின் கோரிக்கை என்ன?

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி ஊராட்சிக்குபட்டது தில்லைவனம் தோப்பு கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்... மேலும் பார்க்க

GRT: சுகாதார சேவைகளுக்கான வலுவான பாலத்தை அமைக்க உதவிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்!

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சமூகப் பொறுப்பிற்கான தனது உறுதியை தொடர்ந்து வலுப்படுத்தி, பின்தங்கியவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சுகா... மேலும் பார்க்க