செய்திகள் :

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

post image

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன். 16) வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளை அறிக்கை வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ.13.18 கோடியாக இருப்பதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவினம். அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வெள்ளை அறிக்கை வெளியீட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்கிடம், கடன் சுமை அதிகரிக்க நலத்திட்டங்கள் காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. ஆனால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது. வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்

அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசுக்கு ரூ.100 வருவாய் கிடைத்தால் ரூ.45 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது.

இந்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனும், மாநிலங்களால் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின் முழு விவரங்கள் கீழே PDF-ஆக இணைக்கப்பட்டிருக்கிறது.

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க