செய்திகள் :

ஈரான் அணு ஆயுதத்தின் மீது அமெரிக்கா ஃபுல் ஃபோக்கஸ்; ஆனால், சீனாவோ அமெரிக்காவிற்கு எதிராக பக்கா ரெடி!

post image

ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த வேளையில், சீனா சத்தமே இல்லாமல் அணு ஆயுதக் கட்டமைப்பில் முக்கியமான வேலையை செய்து வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

அதனால், எல்லா விதத்திலும் ஒரு நாடு இன்னொரு நாட்டை விட, 'சிறந்ததாக' இருக்க வேண்டும் என்று முனைப்புடனும் இருக்கிறது... அதற்கான செயல்களையும் செய்து வருகிறது.

அதில் ஒரு பகுதி தான் சீனாவின் தற்போதைய செயல்பாடு.

சீனாவின் கட்டமைப்பு
சீனாவின் கட்டமைப்பு

தங்களிடம் இருக்கும் வசதி மூலம் இப்போதே சீனா தனது அணு ஆயுதத்தை அமெரிக்காவின் எந்த நகரத்தின் மீது வேண்டுமானாலும் ஏவலாம்.

இந்த வசதியைத் தற்போது இன்னும் விரிவாக்கி வருகிறது சீனா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி, சீனா தங்களது மிக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளைக் கொண்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அணு ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில், பெய்ஜிங் ஏவுதளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் தகவல் தொடர்பு முனைகள் அடங்கிய ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்கி வருகிறது.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்த விண்வெளி புகைப்படங்களின் படி, சீனா தற்போது 80-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு பேட்டரிகளை விரிவாக்கி வருகிறது.

இது அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் நிச்சயம் ஆபத்தான எச்சரிக்கை தான்.

கர்நாடகா விறுவிறுப்பு: 'முதல்வர்' சிவக்குமாருக்கு இரண்டு துணை முதல்வர்களா? கார்கே நகர்த்தும் காய்!

சட்டமன்றத் தேர்தல் முடிந்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவிலேயே இன்னும் பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் இன்னொரு தென் மாநிலமான கர்நாடகாவில் அரசியல் பரபரப்புகள் நடந்தேறி வருகின்றன. இரண்டு வாரங்களாக ஓடிக்... மேலும் பார்க்க

'எப்பேற்பட்ட அதிகாரிகள் இருந்த துறை தெரியுமா?' - அருண் ஐ.பி.எஸ்ஸை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனரான அருண் ஐ.பி.எஸ் மீது கடும் கண்டனங்களை நீதிமன்றம் தெரிவி... மேலும் பார்க்க

ஈரான் போர் முடிவுக்கு ஆசைப்படும் ட்ரம்ப்; மனசு வைக்காத ஈரான் - ட்ரம்பிற்கு 'தேர்தல் பயம்'?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானில் போர் தொடங்கியது வேண்டுமானால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஷ்டத்திற்கு தொடங்கியது இருக்கலாம். ஆனால், முடிவு அவர் விரும்புவதுப் போல அமையாது போலும். ஈரான் அணு ஆயுதத் தயாரி... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் நள்ளிரவில் திடீர் ஆய்வு – காரணம் என்ன?

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத் கடந்த 28-ம் தேதியன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பலவிதமான குற்றச்சாட்டுகள... மேலும் பார்க்க

‘பாட்டிலுக்கு 10 ரூபாயை ஒழிக்க வேண்டியது ஏன்?’ – டாஸ்மாக் ஊழியர்களிடம் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் விக்னேஷ், “பார் நடத்துபவர்களை எந்தெ... மேலும் பார்க்க

'சீருடையும், ஐ.டியும் போதும்' புதிய பஸ் பாஸ் வரும் வரை அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சலுகை!

'புதிய பயண அட்டை' வழங்கப்படுவதற்கு முன்பு, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் ... மேலும் பார்க்க