இயக்குநர் இரா. சரவணன் எழுதிய சங்காரம் நூல் அறிமுக விழா | Vikatan | விகடன் பிரசுர...
"என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம்" - அஜித் குமார்
24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.
ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.
அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார்.

அஜித் குமார் பேச்சு
இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, "எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது.
எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது.

















