செய்திகள் :

"ஒரு தந்தையாக..!"- கண்கலங்கிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

post image

234 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க முன்னிலை வகித்து வருவது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

த.வெ.க தலைவர் விஜய்யின் இந்த வெற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் "ஒரு தந்தையாகப் பெருமைகொள்கிறேன்.

தவெக - விஜய்
தவெக - விஜய்

சந்தோஷமாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்? விஜய் வெற்றியை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்யை குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். இது சாதாரண வெற்றி கிடையாது.

எதிர்ப்புகளைத் தாண்டி விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். 'எந்த ஒரு ஊழல்வாதிகளுடனும் கூட்டணிக்குப் போகமாட்டேன். தனியாக நின்று மக்களுக்கு நல்லது செய்வேன்' என விஜய் சொல்லி தனியாக நின்றதே பெரிய விஷயம்.

எவ்வளவோ எதிர்ப்புகளையும், சோதனைகளையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்" என்று எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க