பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
`ஓய்வுக்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம்' - எந்த நாடு பெஸ்ட்? ஆய்வு சொல்லும் தகவல்
இன்றைய காலகட்டத்தில், ஓய்வூதியம் என்பது பணியிலிருந்து விடைபெற்று ஒதுங்குவது மட்டுமல்ல; அது வாழ்க்கையின் புதிய தொடக்கமாக மாறிவிட்டது.
சமீபத்தில் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை கிரீஸ் பிடித்துள்ளது.
எப்போதும் டாப் இடங்களில் இருந்த போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்தள்ளி, ஏழாவது இடத்தில் இருந்த கிரீஸ் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
இந்தக் குறியீடு, ஓய்வுக்காலத்திற்கு பிறகு தனிநபருக்கு கிடைக்கும் மருத்துவம், காலநிலை, பாதுகாப்பு, நிதி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு அங்குள்ள மலிவான வாழ்வாதாரச் செலவு முக்கிய காரணம். இது அந்த நாட்டில் உள்ள ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் அல்ல, பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறும் ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும்.
கிரீஸ் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய குடியிருப்புகள், கோல்டன் விசா திட்டம், குறைந்த செலவில் மருத்துவம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன.
இந்தக் குறியீட்டில் அடுத்தடுத்த இடங்களில் அயர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.



















