செய்திகள் :

`கருத்துக் கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை!' - செங்கோட்டையன்

post image

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கருத்துக் கணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். தந்தி ஆன்லைன் கருத்துக் கணிப்பில் 2,50,808 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுத்து இருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில், 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள். மற்றவர்கள்  அதற்கு கீழே இருக்கும்  சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும் இலங்கை, நேபாள், வங்கதேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பிற்கும் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை. கருத்துக் கணிப்பு  என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது சால பொருத்தமாக இருக்கும். மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய நாட்டின் வரலாற்றில், பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சி, சோசலிச புரட்சி வரிசையில், வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது. 200 இடங்களில் வெற்றி பெறுவார், அவர் தான் தமிழ்நாட்டை ஆள்வார். இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. கருத்துக் கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்? யூடியூப்கள் தான் எடுத்துள்ளார்கள். டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது” என்றார்.

சென்னை: வாக்குகள் எண்ணும் மையத்தில் `ஜன நாயகன்' படம்; Facebookல் பதிவு செய்த நபர் சிக்கியது எப்படி?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

"குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்" – விஜய் மீது காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகார்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.அதில், “கடந்த 21ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்... மேலும் பார்க்க

தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் போது கோவை மற்றும் கரூர் என மாறி மாறி சென்று தேர்தல்... மேலும் பார்க்க

நெல்லை: வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்! | Photo Album

நெல்லை: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்!நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்! மேலும் பார்க்க

'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!

முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வா... மேலும் பார்க்க