செய்திகள் :

'பொருளாதார அழுத்தத்தில் பாக்.?' ஈரான் போரால் பாகிஸ்தானிற்கு என்னென்ன பாதிப்பு? - ஷெபாஸே சொல்கிறார்!

post image

ஈரான் போரில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

ஈரான் போர் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியிருக்கிறார்.

என்ன பேச்சு?

"ஈரான் போர் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாகிஸ்தான் அடைந்த பொருளாதார வளர்ச்சியிலும் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்
ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்

800 மில்லியன் டாலர்கள்

ஈரான் போருக்கு முன்பு, பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. இந்தப் போரினால் எண்ணெய் இறக்குமதியின் விலை இப்போது 800 மில்லியன் டாலராக மாறிவிட்டது.

இது பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது.

இந்த விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் பெட்ரோல் நுகர்வைக் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் குறைத்துவிட்டது.

இதனால், இந்தப் போரை முடிப்பதற்கான செயல்களிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும்.

மிகப்பெரிய முன்னேற்றம்

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையே 21 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை மிகப்பெரிய முன்னேற்றம்.

கடந்த வாரம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நடந்த சந்திப்பில், அவர் தலைமையிடம் பேசிவிட்டு பாசிட்டிவான பதிலை சொல்வதாக தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

கேரளம்: "தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை"- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

கேரள மாநில ராணுவ நலன் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் பி.அசோக். இவர் கேரள வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்துவருகிறார்... மேலும் பார்க்க

தெலங்கானா சதுரங்கம்: முக்கோண வலையில் BRS; 'செக்' வைத்திருக்கும் மகள்... தப்புவாரா கே.சி.ஆர்?

"நான் ஆயிரம் முறை மறுபிறவி எடுக்க நேர்ந்தாலும் கூட, தெலங்கானாவிற்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன். என்னை எதிர்ப்பவர்கள் நூறு பிறவிகள் எடுத்தாலும், என்னைப் மக்களிடமிருந்து பிரிக்க முடியாத... மேலும் பார்க்க

பின்வாங்கிய உத்தவ்; கோபமான காங்.; ஒரு சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு முட்டிமோதும் எதிர்க்கட்சிகள்!

மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுவார் என்று எதிர்பார... மேலும் பார்க்க