செய்திகள் :

கருப்பு: "உறுதியான பதில் ஏதுமில்லை!"; திரைப்படம் நாளை வெளியாகுமா? - ஆர்.ஜே. பாலாஜி சொல்வதென்ன?

post image

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

கருப்பு படம்
கருப்பு படம்

இப்படத்தின் புரோமோஷனுக்காக, படக்குழுவினர் ஹைதராபாத், கேரளா எனச் சுற்றி வந்தார்கள். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று சென்னையில் ஃபீனிக்ஸ் மாலிலும் ஒரு நிகழ்வை நடத்தியிருந்தார்கள்.

தற்போது, படம் வெளியாவதற்கு சில சிக்கல்கள் எழுந்திருப்பதால், திரைப்படம் நாளை என்கிற வெளியாகுமா என்கிற கேள்வியோடு ரசிகர்கள் பலர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு ஆர்.ஜே. பாலாஜி பதிலை தந்திருக்கிறார்.

இது தொடர்பாக பதிவிட்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, "எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை.

பிரச்னைகளைத் தீர்க்கத் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன.

ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளையெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா release ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!" என்றிருக்கிறார்

கருப்பு: ``எங்களின் ரத்தமும் வியர்வையும் கலந்த படம்" - தயாரிப்பு நிறுவனத்தின் நெகிழ்ச்சிப் பதிவு!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்... மேலும் பார்க்க

Karuppu: இறுதியாக திரையை எட்டும் 'கருப்பு' - படம் தாண்டிய தடைகள் என்னென்ன?

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு கடைசி நேரத்தில் எழுந்த சிக்க... மேலும் பார்க்க

Karuppu: "ஊழியர் ஒருவரின் தவறால்..." - கருப்பு படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது எப்படி?

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நேற்றிரவே திரைப்... மேலும் பார்க்க

Karuppu: வட மாநிலங்களில் மட்டும் வெளியான 'கருப்பு'; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்; என்ன நடந்தது?

இன்று திரைக்கு வந்திருக்க வேண்டிய சூர்யாவின் 'கருப்பு' படம் சில சூழல்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் சில இடங்களில் ( மும்பை, புனே, வாரணாசி) 'கருப்பு' படம் திரையிடப்பட்டு பாதியில் நிற... மேலும் பார்க்க

Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான, 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நேற்றிரவே திரைப... மேலும் பார்க்க

"உதயநிதியின் பேச்சு வன்மத்தின் உச்சம்; விஜய் எங்கள் பிரச்னையை உடனே.!" - இயக்குநர் பேரரசு

சைலன்ட் இன்ஃப்ளூயன்சர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு முதல்வர் விஜய் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குறித்தும் பேசியிருக்கிறார். "விஜய், இன்று நம் திரையுலகிலிருந்து... மேலும் பார்க்க