செய்திகள் :

'டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!' - எம்.எல்.ஏ காமராஜ்

post image

மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா குறித்து எம்எல்ஏ காமராஜ் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய எம்எல்ஏ காமராஜ், "எல்லா கட்சியினர் உடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சில இடங்களில் வருத்தப்பட்டு பேசினார்.

டி.ஆர்.பி ராஜா
டி.ஆர்.பி ராஜா

எனக்கே அது சங்கடமாகி, அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். இப்படி நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் சீட் வேண்டாம் என்றே போயிருப்பேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட நம்ம உறவு அப்படியே தொடரட்டும். 100 ஆண்டுகாலம் ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் இந்தத் தொகுதிக்கு செய்ய முடியாது.

நீங்கள் கொண்டு வந்த பணிகளை எள்ளளவும் நாங்கள் மாற்ற மாட்டோம் என நேரடியாக அவரிடம் ஃபோனில் கூறினேன். அவர் மன்னார்குடிக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று டி.ஆர்.பி. ராஜா குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

`உலகப் பொருளாதாரம் சரிவின் விளிம்பில்... 1970களை மிஞ்சும் பேரழிவு?' - சிங்கப்பூர் பிரதமர் எச்சரிக்கை

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பெருவழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை விட மிக மோசமான 'ஸ்டாக்ஃபி... மேலும் பார்க்க

பெட்ரோல்: "மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் விலை உயர்வைத் தாங்கியிருக்க வேண்டும்" - அன்புமணி

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

முதல்வர் டு எதிர்க்கட்சி தலைவர் டு முதல்வர்! - கேரளாவில் ஒரே நாளில் வந்த அறிவிப்பு!

கேரள சட்டசபை ​எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக காங்கிரஸ் நேற்று தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த பினராயி விஜயனை எதிர்க்கட்சித் தல... மேலும் பார்க்க

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மி... மேலும் பார்க்க

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க