செய்திகள் :

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

post image

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், மிகவும் 'டார்கெட்' செய்யப்பட்ட மிக முக்கியமான இடம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாந்தநாதபுரம் 4-வது வீதி. அங்கு அடுத்தடுத்து அமைந்திருந்த அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும், அந்தப் பகுதி மக்களுக்கும் பெண்களுக்கும் நீண்டகாலமாக ஒரு 'நரகமாகவே' இருந்து வந்தன. இதனால் பொதுமக்களும்,பெண்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் சொல்லி மாளாது.

பேருந்து நிலையம் என்பதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால், குடிகாரர்களின் அட்டூழியத்தால் பெண்கள் அந்தப் பக்கம் நடந்து செல்லக் கூட அஞ்சினர்.

போதை தலைக்கேறிய நிலையில் அரைகுறை ஆடையுடனும், சில நேரங்களில் நிர்வாணக் கோலத்திலும் குடிகாரர்கள் அங்கே நடத்திய கூத்துகள் காண்போரை முகம் சுளிக்க வைத்தன. இந்த இரண்டு கடைகளையும் மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் புதிய அரசின் உத்தரவுப்படி இந்த இரண்டு கடைகளுக்கும் நிரந்தரப் பூட்டு போடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த சாலையில் நடந்து சென்ற புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஊழியர் நம்மிடம்,

"வேலை முடிஞ்சு ஒவ்வொரு நாளும் இந்த ரோட்டுல போகும்போது உயிரைக் கையில பிடிச்சிட்டுதான் போகணும். குடிகாரங்க கூட்டத்துல நடக்கவே முடியாது. ஆபாசமான வார்த்தைகள், கிண்டல்கள்னு அசிங்கமா இருக்கும். இப்போ இந்த ரெண்டு கடைக்கும் பூட்டு போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதோட நிறுத்திடாம, தமிழகம் முழுதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் ஒழிச்சுட்டா இந்த அரசுக்கு மக்கள் என்னைக்குமே நன்றிக்கடன் பட்டிருப்பாங்க!" என்றார்.

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையி... மேலும் பார்க்க

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற... மேலும் பார்க்க