செய்திகள் :

’‘போங்க போங்க' என விரட்டாமல், ‘வாங்க’ என்று ஒருமுறை அழைத்தால்.!’ - எடப்பாடிக்கு வேலுமணி அட்வைஸ்

post image

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  அவரின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள்.

தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல ‘நான் மட்டுமே எல்லாம்’  என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.

தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். ‘எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்’ என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான். ‘போங்க போங்க’ என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், ‘வாங்க வாங்க’ என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும், கட்சி நல்லா இருக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையி... மேலும் பார்க்க

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற... மேலும் பார்க்க